அயோத்தி வழக்கில் விசாரணையை அக்டோபர் 18க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு!

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வுபெற இருப்பதால் அக்டோபர் 18ம் தேதிக்குள் அயோத்தி வழக்கை முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார். அயோத்தி வழக்கை விசாரிக்க வரும் அவர் ஓய்வு பெறுவதற்கு முன் விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

அதேவேளையில் அயோத்தி வழக்கு விவகாரத்தை சுமூகமாக முடிக்க உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட பேச்சுவார்த்தைக் குழுவின் மூலம் முடிவு செய்யலாம் என்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டிவிட்டது என்பதால் அதை அக்டோபர் 18ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

மேலும் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் எந்த சூழ்நிலையிலும் மூன்று பேர் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு ஏதேனும் ஒரு தீர்வு ஏற்றி விட்டால் அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Leave a Reply