திருவாடானை தாசில்தாராக நியமிக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த இளைஞர்

திருவாடானை அருகே நடைபெற்ற மக்கள் திட்ட முகாமில் ஒரு இளைஞார் தன்னை திருவாடானை வட்டாச்சியராக நியமணம் செய்ய வேண்டி மனுக் கொடுத்தது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, மங்களக்குடியில் மக்கள் திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் வீர்ராகவராவ் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் 250க்கும் மேற்பட்ட மனுக்கள் பொது மக்கள் கொடுத்தனர். அதில் கட்டவளாகம் பஞ்சாயத்து, கீழ்குடி கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் மகன் வினோகர் (32) என்ற இளைஞர் தன்னை திருவாடானை தாசில்தாராக ஆறுமாத காலம் நியமணம் செய்ய வேண்டி மனுக்கொடுத்தார்.

இது குறித்து வினோகரிடம் கேட்ட போது தன்னுடைய தகப்பனார் பெயரில் இருந்த பட்டா பதிவுகளை மாற்றம் செய்ய திருவாடானை தாசில்தார் அவர்களிடமும், திருவாடானை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியிலும் மனுக் கொடுத்தும் எவ்வி நடவடிக்கையும் இல்லை, பின் ராமநாதபுரம மாவட்ட வேருவாய் கோட்டாச்சியரிடமும் மனு கொடுத்தும் எவ்வித பலனுமில்லை, பதிலும் இல்லை, மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெருகிவிட்டதாகவும், ஏழை எளிய மக்கள் தங்களின் தேவைக்காக சான்றிதழ்கள் பெற வரும் பாமர ஏழை மக்களை திட்டி அனுப்பி விடுவதாகவும், அப்படி சான்றிதழ்கள் பெறுவதற்கு அரசு நிர்ணயம் செய்த தெகையை விட கூடுதலாக ரஞ்சமாக கேட்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

அதனால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே திருவாடானை பகுதிகளில் அரசாங்க அலுவலர்கள் செய்யும் ஊழலை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியரின் கீழ் செயல்படும் திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு தாசில்தராக ஆறு மாத காலம் நியமணம் செய்ய கேட்டுக்கொள்வதாகவும் அப்படி நியமணம் செய்தால் ஆறுமாத காலத்தில் ஊழலை ஒழித்து பாமர ஏழை மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்வதாக மனுக் கொடுத்துள்தாகவும், அந்த மனுவின் பேரில் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக தெரிவித்தார்.


Leave a Reply