தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னையில் பயணத்திட்டம், தொழில் மேம்பாட்டு திட்டம், கடல் அருங்காட்சியகம் அமைத்தல், காவிரி திட்டம்,சென்னையில் கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் திட்டம் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இத்திட்டங்களை விரைவில் செயல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முதலமைச்சர் அறிவுறுத்தினார். இதற்கு 289 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் முதலீடுகளை ஈர்க்கவும் வேலைவாய்ப்புகளை பெருக்கமும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்சி சம்பத், விஜயபாஸ்கர், வெல்லமண்டி, நடராஜன், எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
One thought on “முதல்வர் தலைமையில் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் ஆய்வு கூட்டம்”