காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும் – பிரதமர் மோடி

காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் நாசிக்கில் பாஜக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். பல ஆண்டுகளாக காஷ்மீர் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படாமல் இருப்பதற்கு காங்கிரஸ் ஆட்சியை காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.

 

50 கோடி கால்நடைகளுக்கு நோய் தடுப்பு மருந்து அடிக்கும் மத்திய அரசின் திட்டம் அரசியல் ஆதாயம் சார்ந்தது என்று விமர்சனம் குறித்த பேசியவர் கால்நடைகள் ஓட்டு போடுவதில்லை என்று கூறினார். கால்நடைகளின் வாய் மற்றும் காயல் சார்ந்த நோய்கள் மற்றும் கருச்சிதைவு நோய்க்கு எதிராக ஆடுமாடுகள் எருதுகள் பன்றிகள் உள்ளிட்ட 50 கோடி கால்நடைகளுக்கு நோய் தடுப்பு மருந்து அளிக்க தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளது.


Leave a Reply