வங்கியில் நுழைந்து கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கனரா வங்கியில் நுழைந்து கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். மானாமதுரை பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி சரவணன் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் தங்கமணி நேற்று இவரை இருசக்கர வாகனத்தில் தொடர்ந்து வந்த நான்கு நபர்கள் அவரையும் அவரது நண்பர் கணேஷ் ஓட ஓட துரத்தி துரத்தி வெட்டினர்.

 

அப்போது அருகில் இருந்த கனரா வங்கியில் இருவரும் நுழைந்தனர். பின்னர் வங்கிக்குள் நுழைந்து தங்கமணியை தாக்க முற்பட்ட தமிழ்ச் செல்வம் என்பவரை வங்கி காவலர் துப்பாக்கியால் சுட்டதால் அவருடன் வந்தவர்கள் தப்பி ஓடினர். இதனையடுத்து தமிழ் செல்வத்தை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் தப்பி ஓடியவர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதில் பூமி என்பவர் போலீசாரிடம் சிக்கிய நிலையில் தலைமறைவாக உள்ள மத்த நபரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.


Leave a Reply