இ-சிகரேட்டுக்கு மத்திய அரசு தடைவிதிப்பு

இந்தியாவில் இ சிகரெட் விற்பனை மற்றும் உற்பத்திக்கு முழு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

 

அப்போது பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடு முழுவதும் இ சிகரெட்டுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இ-சிகரெட் உற்பத்தி விற்பனை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறிய நிர்மலா சீதாராமன் இ-சிகரெட் தொடர்பான அனைத்து விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்படும் என்றும் கூறினார்.

இது தொடர்பான அவசர சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த ஆண்டு 11 லட்சத்து 52,000 ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்பட உள்ளது. என்று அறிவித்தார்.


Leave a Reply