மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தை தனியார் பள்ளிகள் இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழ் வெளியீடு

மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளிகள் இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. நர்சரி பிரைமரி உள்ளிட்ட அனைத்து வகையான அரசு உதவி பெறாத பள்ளிகளை தனியார் பள்ளிகள் இயக்கமாக மாற்ற தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இனி மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தனியார் பள்ளிகள் இயக்ககம் என்று அழைக்கப்படும் என்று தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டு இருக்கிறது .அனைத்து வகையான அரசு உதவி பெறாத பள்ளிகள் தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் தான் வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு அறிவித்த அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.


Leave a Reply