கழிவுநீர் ஓடைகளில் இறங்கி மனிதர்கள் சுத்தப்படுத்தும்முறை நீடிப்பதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி

இந்தியாவில் கழிவுநீர் ஓடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்தும் முறை நீடிப்பதற்கு உச்சநீதிமன்றம் தனது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கும் மேலான பிறகும் ஜாதி ரீதியிலான பாகுபாடு இன்னும் நீடிப்பதாக தெரிவித்தனர்.

 

நாட்டில் கழிவுநீர் ஓடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்தும் போது நேரிடும் உயிரிழப்புகள் குறித்து நீதிபதிகள் பெரும் கவலை தெரிவித்தனர். அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் நோக்கி கழிவுநீர் உள்ளிட்டவற்றை இறங்கி சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடுவோருக்கு முகமூடி மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஏன் வழங்கப்படுவது இல்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 

அத்துடன் உலகில் வேறு எந்த நாட்டிலும் உயிரிழப்பதற்காக மனிதர்கள் அனுப்பபடுவதில்லை என்று குறிப்பிட நீதிபதிகள் இந்த முறையினால் நாட்டில் வாரந்தோறும் 4 முதல் 5 பேரையும் உயிரிழப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.


Leave a Reply