இராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் !

தமிழக அரசு, மாவட்ட நிர்வாகங்களின் பணி நெருக்கடிகளை முற்றிலும் கைவிடக் கோரி, மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் திட்ட இயக்குநரிடம் பெருந்திரல் முறையீடு ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

மாவட்ட தலைவர் ஆ.இராஜேந்திரன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் கி.சோமசுந்தர்,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பி.சேகர்,
மாவட்ட பொருளாளர் எஸ்.சண்முகநாததுரை, திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கபாண்டியன் ஆகியோர் பேசினர்.

மாவட்ட பொருளாளர் ஆர்.விஜயகுமார் நன்றி கூறினார்.உள்ளாட்சித் தேர்தல் உடனே நடத்த வேண்டும், பணியாளர்களுக்கு உயரதிகாரிகளின் பணி நெருக்கடியை முற்றிலும் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் வழங்கினர்.


Leave a Reply