பாகிஸ்தானில் இந்து மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த இந்து மருத்துவ மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். சிந்து மாகாணத்திற்குட்பட்ட ஒரு பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வந்த மாணவி நம்ரதா சாந்தினி என்பவர் இன்று விடுதி அறையில் துப்பட்டாவில் கழுத்து சுற்றி இறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

 

இதனை கல்லூரி நிர்வாகம் மற்றும் போலீசார் தற்கொலை என தெரிவித்தனர். ஆனால் மாணவியின் சகோதரர் மருத்துவ ஆலோசகருமான ஒருவர் தனது சகோதரி கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் கழுத்தைச் சுற்றிலும் வொயர்களால் நெறிக்கப்பட்ட தடம் இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் தனது சகோதரி புத்திசாலி என்பதோடு அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூறினார்.

 

தங்களின் இந்து சிறுபான்மையினர் பிரிவைச் சார்ந்தவர்கள் என்பதால் சகோதரியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க மக்கள் உதவ முன்வரவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த பள்ளி முதல்வர் ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாகக் கூறி கோட்டி பகுதியிலுள்ள கோவில் உள்ளிட்ட இடங்கள் சூறையாடப்பட்டன. மேலும் சிந்து மாகாணத்தில் ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் அதிகமான ஹிந்து பெண்களை கடத்தி மதமாற்றம் செய்ய வைக்கின்றனர் .தற்போது இந்த மாணவியின் மரணத்திலும் அவர் மதமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டார் சந்தேகங்கள் எழுந்துள்ளது.


Leave a Reply