சந்தேகப்படும் படி ஏர்வாடியில் காவி உடையில் சுற்றி திரிந்த முஸ்லிம் நபர்

ராமநாதபுரத்தை அடுத்த ஏர்வாடி பகுதியில் காவி உடையில் சுற்றிக் கொண்டிருந்த வடமாநில இளைஞரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உடையில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு நபர் சுற்றித்திரிந்து வருவதாகவும் அவரது பேச்சு மற்றும் நடவடிக்கைகளில் சந்தேகம் உள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீஸார் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் முதற்கட்டமாக அவரது பெயர் அப்துல் வகாப் எனவும் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

அவரிடமிருந்து 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரம் கீழக்கரை மற்றும் ஏர்வாடி ஆகிய பகுதிகளில் கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் உள்நுழைய கூடும் என்பதன் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் காவி உடையில் இளைஞர்கள் அங்கு சுற்றிக்கொண்டிருக்கிறது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply