பிறந்த நாளை ஒட்டி பிரதமர் மோடி குஜராத்திற்கு செல்கிறார்!

பிறந்தநாளை ஒட்டி குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி. சர்தார் சரோவர் அணை முழு கொள்ளளவை எட்டும் வரை பார்வையிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் நர்மதை ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு போதிய அளவு மழை இல்லாததால் பாதியளவு தண்ணீர் மட்டுமே இருந்தது.

 

ஆனால் இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் உச்சபட்ச நீர்த்தேக்க அளவு 137.68 மீட்டர் ஆகும். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை நீர்மட்டம் 138 மீட்டரை எட்டிவிட்டது. இன்னும் 68 சென்டிமீட்டர் நீர் மட்டம் உயர்ந்தால் அணை நிரம்பி வழிய தொடங்கிவிடும். விரைவில் முழு அளவான 137.68 மீட்டர் உயரத்தை நீர்மட்டம் எட்டிவிடும் என்று குஜராத் மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதை பிரதமர் மோடி நேரில் பார்க்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்காக பிரதமர் மோடி தனது பிறந்த நாளை ஒட்டி குஜராத்திற்கு செல்கிறார். அங்கு அவர் தனது தாயாரை சந்தித்து ஆசி பெற உள்ளதாக கூறினார். இதன் பின்னரே அவர் சர்தார் சரோவர் அணை முழு கொள்ளளவை எட்டும் சாதனையை நேரில் பார்த்து மகிழ உள்ளதாக தெரிவித்தார். சர்தார் சரோவர் அணை தண்ணீர் 131 நகர்ப்புற மற்றும் 9006 133 கிராமங்களின் குடிநீர் தேவைக்கும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களின் நீர்பாசன தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது.


Leave a Reply