20 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் டாக்டர்!

கடைகளில் தேனீர் பத்து ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் 20 ரூபாய்க்கு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருகிறார் தஞ்சை சேர்ந்த கிருஷ்ணன் என்ற மருத்துவர். பெயருக்கு ஏற்ப அவரை அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கடவுளாகவே பார்க்கிறார்கள். தஞ்சை பகுதியில் பிரபலம் அடைந்திருக்கிறார் 20 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் டாக்டர் கிருஷ்ணன்.

 

தஞ்சை மாவட்டம் பூதலூர் இல் உள்ள இந்த மருத்துவமனைக்கு விளம்பரப் பலகை இல்லை. வரும் நோயாளிகளை வரவேற்க ஆளில்லை. ஆனால் கூட்டம் நிரம்பி வழிகிறது. காரணம் டாக்டர் கிருஷ்ணன் விலைவாசி கடுமையாக உயர்ந்த நிலையில் இன்னும் 20 ரூபாய்க்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். மலர்களை மொய்க்கும் வண்டு களை போல் பெரும் கூட்டத்திற்கு நடுவே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

 

மருத்துவக் கல்வியை முடித்த கையோடு இங்கே வந்த டாக்டர் கிருஷ்ணன் தொடர்ந்து 41 ஆண்டுகளாக இந்தப் பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். நோயாளிகளிடம் முதலில் மூன்று ரூபாய் கட்டணம் வசூலித்த டாக்டர் கிருஷ்ணன் தற்போது 20 ரூபாய் பெறுகிறார். இதனால் தற்போது அரசு மருத்துவமனை போல் கூட்டம் எப்போதும் நிரம்பி வழிகிறது.தொடர்புக்கு செல்போன் எண் கேட்டபோது செல்போன் பயன்படுத்துவது இல்லை என அதிர்ச்சி அடையச் செய்தார். இந்த மருத்துவர் நவீன உலகில் இதுபோல் ஒரு மருத்துவரா என வியக்க வைக்கிறார் டாக்டர் கிருஷ்ணன்.


Leave a Reply