அவசியம் ஏற்பட்டால் தானே அங்கு செல்வேன் என தலைமை நீதிபதி அதிரடி!

அவசியம் ஏற்பட்டால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆய்வு நடத்த செல்லப்போவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சட்ட பிரிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அப்போது காஷ்மீரில் நாளிதழ்களில் வழக்கம்போல் வெளியாகவும் அதற்கு தேவையான உதவிகளை செய்து வருவதாகவும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் தெரிவித்தார்.

 

செய்தி சேகரிக்க செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், தொலைதொடர்பு இணையதள சேவையும் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை களை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஜம்மு-காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக தகவல் வருவதாக குறிப்பிட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தேவையேற்படின் தானே அங்கு செல்வேன் என்றும் தெரிவித்தார்.


Leave a Reply