வருகிற 20 ஆம் தேதி அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!

இந்தி மொழியை திணிக்கும் மத்திய அரசின் முயற்சிகளை கண்டித்து வருகிற 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.

 

இதில் துரைமுருகன் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் இந்தியாவை இந்தி எல்லைக்கும் அமைச்சரின் கருத்துக்கு பல்வேறு துறைகளில் இந்தியை திணிக்கும் மத்திய அரசின் முயற்சி நாட்டின் பன்முகத்தன்மை வேற்றுமையில் ஒற்றுமை என்றஎன்ற அடிப்படை நோக்கத்திற்கு எதிரானது என சுட்டிக்காட்டப்பட்டது.

 

மேலும் இந்திய ஆதிக்கத்தால் ஏற்படும் பாதிப்பை முளையிலேயே கிள்ளி எறிந்து விட வருகிற 20ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது இளைஞர்கள் மாணவர்கள் மகளிர் தமிழ் உணர்வு கொண்ட சான்றோர் மற்றும் ஆன்மீக வழி நடப்போம் ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.


Leave a Reply