இடுக்கியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட கொடூரம் நடந்திருக்கிறது. இதுகுறித்து 100 பேரிடம் காவலர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே தேயிலை தோட்ட தொழிலாளர் தொடர் குடியிருப்பு ஒன்றில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

தோட்ட வேலைக்கு சென்று விட்டு திரும்பிய பெற்றோர் வீடு திறந்து கிடந்ததால் மகள் விளையாடிக் கொண்டிருக்கலாம் என நினைத்தனர். ஆனால் வீட்டிற்குள் அவர் கண்டதோ அதிர வைக்கும் காட்சி தங்களின் செல்ல மகள் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். ஓணம் பண்டிகை விடுமுறை காலம் என்பதால் விளையாட்டுகளில் ஒன்றான ஊஞ்சல் கட்டி விளையாடிய போது இந்த சம்பவம் நடந்திருக்க கூடும் என்று காவல்துறையினர் தெரிவித்து இருந்தனர்.

 

ஆனால் உடற்கூறு பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைகள் கொல்லப்பட்டதும் குரல்வளை நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு மூணாறு உதவி கண்காணிப்பாளர் ரமேஷ் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த மலையில் முகாம் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

 

இறந்த மாணவியின் ஆசிரியை, உடன் படிக்கும் மாணவ, மாணவியர், பொது மக்கள், சுற்றத்தார் என நூற்றுக்கும் அதிகமானோர் உடன் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். 8 வயது சிறுமிக்கு நிகழ்ந்துள்ள இந்த கொடூரம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply