10 ஆம் வகுப்பு திருத்தப்பட்ட கால அட்டவணை வெளியீடு!

மொழிப் பாடங்களுக்கு ஒரே தள தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் ஆங்கிலம் உள்ளிட்ட மொழி படங்களுக்கு இரண்டு தாள்களாக தேர்வு நடத்தப்பட்டு இருந்த நிலையில் இனி ஒரே தாளாக தேர்வு நடத்தப்படும் என கடந்த 13-ஆம் தேதி அரசு ஆணை வெளியிடப்பட்டது.

 

அதன்படி பத்தாம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மார்ச் 19ஆம் தேதி தொடங்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 27ஆம் தேதி தமிழ் பாடத்திற்கான தேர்வும் மார்ச் 28ஆம் தேதி மாற்று மொழி பாடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. மார்ச்சமாதம் 31 ஆம் தேதி ஆங்கில படத்திற்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து ஏப்ரல் மூன்றாம் தேதி சமூக அறிவியலும் ஏப்ரல் 7 ஆம் தேதி அறிவியலும் ஏப்ரல் 13 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

 

தமிழ் 27.03.2020
பிறமொழி 28.03.2020
ஆங்கிலம் 31.03.2020
சமூக அறிவியல் 03.04.2020
அறிவியல் 07.04.2020
கணிதம் 13.04.2020

 

ப்ளஸ் டூ ப்ளஸ் 1 பொதுத் தேர்வுகள் முடிந்த பின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் வகையில் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் நான்காம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply