--- --:--:-- --

வாட்ஸ் ஆப் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை!

download (5)

சென்னையில் பாதாள அரையின் கஞ்சா குடோன் அமைத்து குட்கா மற்றும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அந்த கும்பல் கொடுத்த வாக்குமூலத்தில் சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களுக்கும் கஞ்சா விற்கப்படும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

 

இதனை எடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி கிடைத்த தகவலின் சென்னை அடையாறில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த மதுரையைச் சேர்ந்த சிங்கராஜ் என்ற நபரை பிடித்து அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

 

சிறு சிறு பொட்டலமாக தயார் செய்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் ஐஐடி ஊழியர்களுக்கும் சப்ளை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தார் இவர் கொடுத்த தகவலின்படி மதுரவாயல் பகுதியில் வசிக்கும் பாண்டி அவரது கூட்டாளிகளான செல்வம் துரை வரதராஜ் ஆகியோரையும் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர்கள், சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த சுப்பிரமணி அவரது மகன் சூர்யா ஆகியோரையும் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 36 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இந்த கும்பலுக்கு சென்னையில் மட்டும் ஆயிரத்து 400 வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும் ,இந்த வாடிக்கையாளர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள்தான் அதிகம் என்றும் அதிர்ச்சி தகவலை போலீசார் தெரிவித்து உள்ளனர்.

 

வாட்ஸப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கஞ்சா விற்று வந்த இந்த கும்பல் நான்கு நாட்களுக்கு ஒரு முறை 50 கிலோ கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து சென்னையில் விற்று தீர்ப்பதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். கல்லூரி மாணவர்களை மட்டுமல்லாமல் பள்ளி படிக்கும் சிறுவர்களையும் கஞ்சா போதைக்கு அடிமையாகி இந்த கும்பல் கஞ்சா போதையில் கழிவறையில் வழுக்கி விழுந்து கைகால்களை உடைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon