சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு டெல்லியை சேர்ந்த ஹர்தர்ஷன் சிங் நாக்பால் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கடிதம் அனுப்பியுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு கடந்த ஒன்பதாம் தேதி ஒரு மிரட்டல் கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அந்த கடிதத்தில் தனது மகனுடன் சேர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட இருப்பதாக ஒரு கடிதத்தில் டெல்லியை சேர்ந்த நபர் அந்த கடிதத்தை எழுதியிருக்கிறார்.

 

தாங்கள் ஒரு தடைசெய்யப்பட்ட அதாவது சர்வதேச காலிஸ்தான் குரூப்பில் இருந்து வருவதாக அறிவித்திருக்கிறார். செப்டம்பர் 30 ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு சம்பவத்தில் ஈடுபடுவதாக அதில் மிரட்டல் விடுத்திருக்கிறார். இது சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் இந்த கடிதம் குறித்து விசாரணை நடத்த இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்த மிரட்டல் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையருக்கு அதேபோல மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமை பதிவாளர் இருக்கும் இந்த கடிதத்தை அவர் அனுப்பி இருக்கிறார்.

 

அது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். இந்த கடிதத்தில் மிரட்டல் விடுத்த நபர் தான் ஒரு மாநிலத்தில் இருக்கவில்லை என்றும் பல்வேறு மாநிலங்களில் சுற்றிக்கொண்டு இருப்பதாகவும் தன்னுடைய மொபைல் எண்ணை அடிக்கடி மாற்றிக் கொண்டு இருப்பதாகவும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருக்கிறார். எனவே இதில் இருக்கக்கூடிய முகவரி மற்றும் அதில் இருக்கக்கூடிய தகவல்களை மையமாக வைத்து சென்னை போலீஸார் அடுத்தகட்டமாக டெல்லிக்கு இதுதொடர்பாக தகவல் தெரிவிக்க வாய்ப்புகள் இருக்கிறது.


Leave a Reply