ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த கல்லூரி மாணவிகள்!

ஹைதராபாத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் ஆடை கட்டுப்பாடு விதித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள புனித பிரான்சிஸ் மகளிர் கல்லூரியில் ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. முழங்கை மறைக்கும் வகையில் குர்தா அணிய வேண்டும் என கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஷார்ட், ஸ்லீவ் லெஸ் உள்ளிட்டவற்றை அணிய தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கட்டுப்பாட்டிற்கு எதிராக பதாகைகளை ஏந்தி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Leave a Reply