விடுதியில் கட்டட வசதி இல்லாததால் சமயலறையில் உறங்கும் மாணவர்கள்

நாமக்கல் அருகே அரசு விடுதியில் கட்டிட வசதி இல்லாததால் மாணவர்கள் சமையலறையில் உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முள்ளுக்குறிச்சியில் அரசு உறைவிடம் மாணவர் விடுதி அமைந்துள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட மலைவாழ் இன மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இங்கு ஏழு அறைகள் மட்டுமே இருப்பதால் மாணவர்கள் போதிய இட வசதி இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சமையலறை கட்டடத்தில் மாணவர்கள் படுத்து உறங்கும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி தண்ணீர் வசதியும் தரமான உணவு இல்லாமலும் அரசு உறைவிடம் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.


Leave a Reply