குடியிருப்பு திட்டங்களை நிறைவு செய்ய ரூ.10 ஆயிரம் கோடி நிதி: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

குறைந்த மற்றும் நடுத்தர விலையுள்ள குடியிருப்பு திட்டங்களை நிறைவுசெய்ய பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு நிதி ஏற்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஏற்றுமதியாளர்களுக்கு பல சலுகைகளை நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். குறைந்த நடுத்தர விலை குடியிருப்பு திட்டங்கள் பல நிதி இல்லாமல் பூர்த்தி அடையாமல் இருப்பதாக குறிப்பிட்டார்.

 

இதில் விதிமுறைகளுக்கு உட்பட்ட குடியிருப்பு திட்டங்களிலும் கட்டுமான பூர்த்தி அடையாமல் இருக்கும் பட்சத்தில் அதற்கு 10 ஆயிரம் கோடி சிறப்பு நிதி மூலம் பணம் தரப்படும் என்றார். இத்திட்டத்தை தொழில்முனைவோர் நிபுணர்கள் நிர்வகிப்பார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

இந்த சிறப்பு நிதிக்கு வெளியிலிருந்து முதலீட்டாளர்களும் தங்கள் பங்களிப்பை வழங்குவார்கள் என்றும் அமைச்சர் கூறினார். இதுதவிர ஏற்றுமதிக்கு ஊக்கம் தரும் வகையில் 50,000 கோடி மதிப்பிற்கு சலுகைகள் தரப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்தார். ஏற்றுமதியாளர்கள் பயன்பெறும் வகையில் கைவினைப்பொருட்கள் யோகா சுற்றுலா துறை தொடர்பான நான்கு மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழா 4 இடங்களில் நடத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.


Leave a Reply