நாகலாந்து லாரி உரிமையாளருக்கு ரூ.6.5 லட்சம் அபராதம்

புதிய மோட்டார் வாகன தடுப்புச் சட்டத்தின்கீழ் நாகலாந்தில் சேர்ந்த லாரி உரிமையாளருக்கு ரூபாய் 6.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு அதிக அளவில் முன்பிருந்ததை விட பலமடங்கு அபராதங்கள் விதிக்கப்பட்டதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

 

இதில் பல ஆயிரம் ரூபாய் வரை இரண்டு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அது பல இடங்களில் ஒரு லட்சம் இரண்டு லட்சம் வரை அபராதம் விதிக்கப் பட்டதாக தகவல் வந்திருக்கிறது. ஆனால் அதையெல்லாம் மிஞ்சும் வகையில் தற்போது ஒரிசாவில் இருந்து ஆறு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இதுவரை இல்லாத அளவிற்கு அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ள புதிய நிகழ்வாக இது நடந்துள்ளது.

 

ஒருபுறம் அபராதம் அதிகமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் எத்தனை குற்றங்கள் நடக்கின்றன என்பதும் இந்த அபராதங்கள் மூலமாக வெளிச்சம்போட்டு காட்டப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இந்த விவகாரத்தில் போக்குவரத்து வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் சென்றது அந்த வகையிலும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

 

அதைத்தவிர காற்று மாசு, ஒலி மாசு போன்ற எதைப்பற்றியும் கவலைப்படாமல் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் சென்றதால் தான் இந்த அளவுக்கு அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. டெல்லி போன்ற இடங்களில் இந்த அதிக அபராதம் விதிக்க தொடங்கிய பிறகு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறுவதற்கு நீண்ட வரிசைகளில் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது.


Leave a Reply