தனிம அட்டவணையை நான்கு நிமிடத்தில் வரிசைப்படுத்தி கோவை மேலாண்மை கல்லூரி மாணவர் சாதனை

அறிவியல் துறையில் பெரும் சவாலாக உள்ள தனிம அட்டவணையை நான்கு நிமிடத்தில் வரிசைப்படுத்தி கோவை மேலாண்மை கல்லூரி மாணவர் சாதனை படைத்துள்ளார்.கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள FIREBIRD மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் எம்.பி.ஏ.படித்து வருபவர் ஜீவா.அறிவியல் மற்றும் கணித துறையில் ஆர்வமுள்ள இவர் PERIODIC TABLE ELEMENTS எனும் தனிம அட்டவணையை 4 நிமிடம் மற்றும் மூன்று நொடிகளில் வரிசைப்படுத்தி சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் தனிம அட்டவணையை மனப்பாடமாக ஒப்புவித்தல் போன்ற செயல்களே சாதனைகளாக இருந்த நிலையில் இவரது இந்த சாதனையை பாராட்டி நோபிள் உலக சாதனை புத்தகத்தில் இவர் இடம் பெற்றுள்ளார்.இவரது இந்த சாதனையை பாராட்டி நோபிள் உலக சாதனை சான்றிதழை அஜுக்கேட்டர் சங்கர் வழங்கினார்.இதற்கான விழாவில் கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி அரவிந்த் சுப்ரமணியம்,மற்றும் இயக்குனர் பிரேமா சங்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சாதனையாளர் ஜீவா சிறு வயது முதலே ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என முயற்சித்து வந்ததாகவும் இதில் தனிம அட்டவணையை வரிசைப்படுத்தும் சாதனையை செய்ய நீண்ட காலமாக முயற்சி செய்து இந்த சாதனையை செய்ததாக அவர் தெரிவித்தார்.


Leave a Reply