கடைக்குள் புகுந்த பாம்பை தைரியமாக பிடித்த காவல் ஆய்வாளர்

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் சாம்சன் பாம்பு ஒன்றை தனது உடல் மீது போட்டுக் கொண்டு நடந்து செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது. வீரவநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடையில் பாம்பு ஒன்று கொண்டுள்ளது. இதை கண்ட அங்கிருந்த மக்கள் கூச்சலிட அங்கு வந்த காவல் ஆய்வாளர் தைரியமாக பாம்பை பிடித்தார். மேலும் பிடிபட்ட அந்த பாம்பு தமது கழுத்தில் போட்டுக்கொண்டு அவர் நடந்து சென்றதை அங்கிருந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின்னர் அங்கிருந்த பாம்பை அருகிலிருந்த ஒரு புதர் பகுதிக்கு சென்று அங்கு பாதுகாப்பாக சாம்சன் விட்டார்.


Leave a Reply