எலி தொல்லையை சமாளிக்க புதிய கருவி!

நியுயார்க்கில் எலி தொல்லையை சமாளிக்க புதிதாக எக்கோமில் என்ற புதிய கருவி மற்றும் மதுபானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நியூயார்க்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வின்போது மக்கள் தொகையை காட்டிலும் எலிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

 

இதனையடுத்து எலி, பூச்சிகள் போன்றவற்றை சமாளிக்க கடந்த 2010ஆம் ஆண்டு சுமார் 129 கோடி செலவில் திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் எலிகளின் நடமாட்டம் ரயில் நிலையம் சுரங்கப்பாதை கழிவுநீர் குழாய் பகுதி மற்றும் தெருக்களிலும் குறைந்தபாடில்லை. அருவருப்புடன் மக்கள் முகம் சலிக்கவே இதற்கு தீர்வு காண நியூயார்க்கை சேர்ந்த நிறுவனமொன்று எக்கோமில் என்ற புதிய கருவியை கண்டுபிடித்து உள்ளது.

 

வாட்டர் பியூரிபையர் போன்ற சதுர வடிவில் இருக்கும் இந்த கருவியின் உயரமான பகுதியில் உணவு வைக்கப்பட்டதும் அதிலுள்ள ஏணி வழியாக ஏறி உணவை சாப்பிட முயலும். இதனை கருவியில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கண்டறிந்தது மறு பக்க கதவை திறந்து வெளியில் சுமார் 80 எலிகளை பிடிக்க அனுப்பிவைக்கும்.

 

அதிலிருந்து எலியானது வழுகி கருவியின் கீழ்புறம் உள்ள மதுபான நிறுவப்பட்டுள்ள பாக்கெட்டில் விழுந்து சில நிமிடங்களில் மயங்கி உயிரிழந்து விடும். தற்போது இந்த கருவியானது ப்ளூ ஃபிலிம் பிரிட்ஜ் என்ற பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக நகர தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் இக்கருவியால் நிரந்தர தீர்வு எட்ட முடியாவிட்டாலும் மக்களுக்கு தற்காலிக விடுதலை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply