மேட்டூர் அணை நிரம்பியதால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணை 43 வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அங்குள்ள அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து 73 ஆயிரம் கன அடியிலிருந்து 76 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

 

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து 35 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரியில் வெள்ளம் பாய்ந்து ஓடுவதால் சேலம் ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது .தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியில் வினாடிக்கு 79 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.


Leave a Reply