தற்கொலையை தடுத்து தக்க சமயத்தில் உயிரை காப்பாற்றிய காவல்துறை

திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த தாமோதரன், மனைவி ரோகினி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் இவர்களுக்கு ஆண், பெண் 2 குழந்தைகள் உளள்னர்.

 

குடும்பத்தகராறில் கணவர் தாமோதரன் அடித்த காரணமாக ரோஹினி தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக, ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டியில் இருக்கும் தனது தாய் சுப்புலட்சுமிக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். இதை கேட்டு அதிா்ச்சி அடைந்து அனைப்பட்டிக்கு ரோகிணியின் தாயார் சுப்புலட்சுமி திண்டுக்கல் நாகல்நகர் வந்து பாா்த்தபோது தனது மகளை காணவில்லை.

 

இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடமும் விசாரித்த போது தெரியவில்லை என்றவுடன், நகர் தெற்குகாவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட தெற்கு காவல் ஆய்வாளர் சரவணன், சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோா் செல்போன் மூலம் ரோகினிக்கு தொடர்பு கொண்டு அரை மணி நேரத்திற்கும் மேலாக பேச்சு கொடுத்தபடியே அனைப்பட்டி சென்று ரோகிணி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனா்.

 

தற்கொலை செய்து கொள்ளும் திட்டத்தை கைவிட செய்து, திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். காவல் நிலையத்தில் ஆய்வாளர் சரவணன் ரோகினியின் கணவர் தாமோதரனை வரவழைத்து இருவருக்கும் அறிவுரைகளை கூறி பிரச்சினையை தீர்த்து வைத்தார். அதன்பின்னர் அவரது குடும்பத்தினரிடம் ரோகினியையும் இரண்டு குழந்தைகளையும் ஒப்படைத்தனர்.

 

தக்க சமயத்தில் தாய் மற்றும் இரு குழந்தைகளை காப்பாற்றி குடும்பத்துடன் சோ்த்து வைத்த திண்டுக்கல் நகர் தெற்கு காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Leave a Reply