கர்நாடகவிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு!

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையான கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இன்று மட்டும் 1500 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தண்ணீரானது கேரளா மற்றும் கபினி அணைக்கு வரக்கூடிய நீராதாரமாக உள்ளது.

 

ஏற்கனவே கடந்த மாதம் தண்ணீர் போதிய அளவு அணைகளில் இருந்த நிலையில் தற்போது அணைகள் நிரம்பியுள்ளது. கிருஷ்ணசாகர் இலிருந்து 44 ஆயிரம் கனஅடி கபினியிலிருந்து 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் நீர் திறப்பு 64 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.


Leave a Reply