தமிழகத்தில் முதன்முறையாக பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு நிரந்தர தீர்வாக இயற்கை பராமரிப்பு மற்றும் ஆய்வு மையம் கோவையில் துவங்கப்பட்டது.பிளாஸ்டிக் கழிவு பிரச்சனை குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வந்தாலும் பல்வேறு துறைகளில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் இதற்கான நிரந்தர தீர்வாக பிளாஸ்டிக் இல்லாத சோளமாவு கொண்டு தயாரிக்கப்பட்ட பைகள்,மூங்கில் பல்துலக்கிகள்,பேப்பர் பென்சில் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களை இயற்கை சார்ந்து தயாரித்து வழங்கும் புதிய இயற்கை பராமரிப்பு கண்டுபிடிப்பு மையம் கோவையில் துவங்கப்பட்டது.

தமிழகத்தின் கோவையில் முதன்முறையாக துவங்கப்பட்ட இந்த மையத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுவதும் ஒழிக்கும் விதமாக சுற்றுச்சூழல் பாதிக்காத விதை நோட்டு புத்தகம்,துணி பைகள் என பல்வேறு விதமான பொருட்களை இயற்கை சார்ந்து தயார் செய்து அதனை சந்தையில் புழக்கத்தில் விட உள்ளனர்.

கோவை சின்னியம்பாளையத்தில் துவங்கப்பட்ட இந்த மையத்தை இயற்கை ஆர்வலர் திரு.கார்த்திகேயா சிவ சேனாதிபதி திறந்து வைத்தார்.மரங்கள் மற்றும் இயற்கை பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக துவங்கப்பட்ட இந்த மையத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விக்கென தனி செயலியும் துவங்கப்பட்டது.

விழாவில், செய்தியாளர்களிடம் பேசிய மையத்தின் இயக்குனர் சுந்தர் பேசுகையில் ஆந்திராவை தொடர்ந்து தமிழகத்தின் முதல் கிளையாக கோவையில் இதனை துவக்கியுள்ளதாகவும் குறிப்பாக இந்த மையத்தில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையிலான பொருட்களை ஆய்வு செய்து தயாரித்து பிளாஸ்டிக் இல்லா நகரமாக கோவையை உருவாக்குவதே இதன் நோக்கம் என தெரிவித்தார்.







One thought on “பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு நிரந்தர ஆப்பு… இயற்கை பராமரிப்பு, ஆய்வு மையம் சுறுசுறுப்பு”