தில்லாலங்கடி வேலையெல்லாம் இனி செல்லுபடியாகாது! ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டாமல் உருட்டி சென்றாலும் சட்டம் பாயும்…

ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் தானே அபராதம் எனக்கூறி காவலர்களைக் கண்டதும் வாகன ஓட்டிகள் வண்டியை தள்ளிக் கொண்டு செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஒட்டினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. ஹரியானாவைச் சேர்ந்த ஐ பி எஸ் அதிகாரியும், எஸ் பியுமான பங்கஜ் நைன், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் தண்டனை பெறுவதை தவிர்க்க, பலர் இப்படி வன்டியைத் தள்ளிக்கொண்டு நடந்து செல்வதாக கூறியிருந்தார்.

இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என தெரியாத போதும், இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரவர் உயிரைக் காக்க, அரசு கொண்டு வரும் சட்டத்தை ஏன் இப்படி மீற வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இவ்வாறு நடந்து, தள்ளிக்கொண்டு செல்லும் வாகன ஓட்டிகளை பின்தொடர்ந்து, போக்குவரத்து காவலர்கள் சென்றால் அவர்கள் சேருமிடம் வரை தள்ளிக் கொண்டே செல்லும் தண்டனையை அனுபவிப்பார்கள் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


Leave a Reply