தமிழகத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்த நிலையில் இன்றும் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. சென்னையில் கடந்த ஒரு வார காலமாக விட்டுவிட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மாலை நேரங்களில் கிண்டி ஈக்காட்டுத்தாங்கல், அடையார், கோயம்பேடு, அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
இதேபோல் தண்டையார்பேட்டை, வண்டலூர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. மேலும் திருவள்ளூர், திருத்தணி, விழுப்புரம் போன்ற இடங்களில் மாலையில் மழை பெய்ததால் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மாணவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
இதற்கிடையே தமிழகம் புதுச்சேரி இடையே லேசானது முதல் மிதமான மழை பெய்தது. கோவை., திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்கனமழையும், திருச்சி ,தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




