ஏடிஎம் கார்டு பாஸ்போர்ட் வங்கி கணக்கு எதுவுமே இல்லாமல் பெரும் ஆதார் கார்டை மட்டுமே வைத்து பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி சேவை இந்தியாவில் கிராமப்புற வங்கி சேவையை மும்மடங்காகும் முயற்சியை கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட சேவைதான்.
இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி தொடங்கப்பட்ட ஓராண்டில் ஒரு கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பண பரிவர்த்தனைகள் என பல்வேறு சாதனைகளை தனதாக்கியுள்ளது. மற்ற வங்கிகளை ஒப்பிடும்போது கணக்கு தொடங்குவது முதல் அதனை பராமரிப்பது வரை அனைத்தும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி சேவை எளிய முறையில் இருப்பதுதான் சிறப்பம்சம்.
குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் கணக்கை தொடங்க ஆதார் மற்றும் கைபேசி எண் மட்டுமே போதுமானது. இருப்பு தொகைக்கு 4 சதவீத வட்டி என்ற வீதத்தில் காலாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும். தபால்காரர் வீட்டிற்கு வந்து வங்கி சேவை அளிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
ஆயிரம் ரூபாய் மட்டுமே செலுத்தி நடப்பு கணக்கை தொடங்கலாம். மத்திய மாநில அரசின் ஓய்வூதியங்களைப் மானியங்களையும் நேரடியாக பெறலாம். இது போன்ற எண்ணற்ற சிறப்பம்சங்கள் பொதுமக்களை இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் வங்கிக் கணக்கை தொடங்க வைத்தது.இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இன்றைய தினத்தில் ஆதார் சார்ந்த பணப் பரிவர்த்தனை சேவைகளும் அறிமுகமாகியுள்ளன.
இதன் மூலம் வங்கிகள் ஏடிஎம் வசதிகள் இல்லாத கிராம மக்கள் எந்த வங்கி கணக்கில் பணம் வைத்திருந்தாலும் ஆதார் அட்டையை மட்டுமே வைத்து தங்களுக்கு தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் 3 லட்சத்து 93 ஆயிரத்து 880 கணக்குகள் தொடங்கப்பட்டு தமிழகத்தில் சுமார் 600 கிராமங்களை முற்றிலும் டிஜிட்டல் கிராமங்களாக மாற்றியுள்ளது, மத்திய அரசின் இந்தியா போஸ்டல் பைமெண்ட் பேங்க்.