ஆம்புலன்ஸ் இல்லாததால் மகளின் உடலை கையில் ஏந்தி சென்ற அவலம்!

தெலுங்கானாவில் சுகாதாரத் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் 7 வயது சிறுமியின் சடலம் ஆட்டோவில் கொண்டு செல்லப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் கோனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத் வருடங்களாக சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

அவரை சிகிச்சைக்காக கரீம் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இருப்பினும் சிகிச்சை பலனின்றி கோமலா பரிதாபமாக உயிரிழந்தார். கையில் பணம் இல்லாத காரணத்தால் மகளின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல வசதி செய்து தரவேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திடம் சம்பத் கேட்டுக்கொண்டார்.

 

தங்களிடம் ஆம்புலன்ஸ் வசதி இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சம்பத் ஆட்டோக்களை அழைத்துள்ளார். சடலத்தை ஏற்ற பலர் மறுத்துவிட்ட நிலையில் பின்னர் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் உதவியால் மகளின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு சென்றார். சுகாதாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே ஆம்புலன்ஸ் இல்லாமல் உடலை ஆட்டோவில் ஏற்றி சென்றுள்ள அவலம் நிகழ்ந்துள்ளது.


Leave a Reply