பொருளாதார சரிவை மறைக்க தான் சிதம்பரம் கைது நிகழ்ந்துள்ளது!

இந்தியாவையும் தமிழ்நாட்டையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அலுவலகத்தில் நடைபெற்ற திருமண விழாவில் துரைமுருகன் ஆற்காடு வீராசாமி, டிஆர் பாலு, அன்பழகன் உள்ளிட்ட திமுக தலைவர்கள் பங்கேற்றனர்.

 

அப்போது மேடையில் பேசிய ஸ்டாலின் நாட்டின் பொருளாதாரம் 5 சதவீதத்திற்கும் கீழே சரிந்து கொண்டிருப்பதாகவும், அதனை மூடி மறைக்கும் நிகழ்வு நடந்து கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினர். இதன் காரணமாகத்தான் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் கைது மற்றும் ஜம்மு காஷ்மீர் விவகாரம் ஆகவே நடைபெற்றதாகவும் விமர்சித்தார்.

 

மேலும் தமிழக அமைச்சரவை சுற்றுலா அமைச்சர் அவையாக மாறியுள்ளதாகவும் விமர்சித்தார். கடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில்பெற்ற முதலீடுகள் குறித்து இதுவரை தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை எனவும் முகஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.


Leave a Reply