--- --:--:-- --

தமிழர்களின் பெருமையை நிலைநாட்டிய ராஜராஜ சோழன் – முதல்வர் விஜய் புகழாரம்

13

தமிழர்களின் பெருமையை நிலைநாட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1041ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்குப் புகழ் வணக்கங்கள் செலுத்துவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கட்டடக்கலையை உலக அரங்கில் நிலைநாட்டிய பெருமைக்குரியவர் ராஜராஜ சோழன் என்றும், ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் தஞ்சை பெரிய கோயில் மூலம் அவரது புகழும் பெருமையும் என்றும் நிலைத்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

மேலும், தமிழர்களின் வரலாற்றுப் பெருமையைப் போற்றுவதுடன், நமது பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழர்களின் கட்டடக்கலைத் திறனையும், வரலாற்றுச் சிறப்பையும் உலகறியச் செய்த மாமன்னர் ராஜராஜ சோழனைப் போற்றுவோம் என்றும் முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon