5 நாளில் ரூ. 4,000 குறைந்த தங்கம் விலை..!
அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையில் அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சில நாட்களில் விலை உயர்வதும், தொடர்ந்து குறைவதும் என தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், நகை வாங்கத் திட்டமிட்டு காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240-ம், கிராமுக்கு ரூ.155-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,880-க்கும், ஒரு கிராம் ரூ.13,235-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை இன்றும் மேலும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,04,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.175 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த 4 நாட்களில் சவரனுக்கு ரூ.4,080 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.225-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





