மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட 4 பேரையும் பயங்கரவாதிகளாக அறிவித்தது மத்திய அரசு. ஒரு அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிப்பதற்கான சட்டவிதிகள் மத்திய அரசின் வசம் இருந்தாலும் தனிநபர்களை தீவிரவாதிகளாக அறிவிக்க முடியாத நிலை இருந்தது. அவ்வாறான நிலை இருப்பதன் காரணமாக தான் இந்தியாவில் தீவிரவாத செயல்கள் அதிகமாக நடந்து வருகிறது.
எனவே அதைக் குறைக்க மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. அதனால் முதற்கட்டமாக 4 பேரும் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.ஹபீஸ் சையத், மசூத் அசார், லக்வி ஆகியோரையும் பயங்கரவாதிகளை அறிவித்தது மத்திய அரசு. இவர்களும் இவர்கள் சார்ந்த அமைப்புகளும் அவர்களுக்கு ஆதரிப்பவர்கள் அனைவருமே சட்டத்தின்கீழ் கடுமையாக விளைவுகளை சந்திக்க முடியும் என்பதனால் இந்த நான்குபேரும் இனி இந்தியாவில் ஒரு தடை செய்யப்பட்ட நபர்களாக மட்டுமே பார்க்கப்படுகிறார்கள்.
அவர்கள் சார்ந்த எந்த ஒரு செயல்பாடும் இந்தியாவில் எந்த ஒரு வகையிலும் அனுமதிக்கப்படாத சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக எந்தெந்த காரணங்களுக்காக இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்பதும் கூறப்பட்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் தாக்குதல் நடத்தியது இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியது பதான்கோட் தீவிரவாத தாக்குதல் நடத்தியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக தீவிரவாதி அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல செங்கோட்டையில் தாக்குதல் நடத்தியது. 2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தீவிரவாதியாக அறிவிக்கப்படுகிறார். இதேபோல தாவூத் இப்ராஹிமை பொறுத்தவரை மும்பை ரயில் குண்டுவெடிப்பில் தொடங்கி பல்வேறு குற்றச்செயல்களில் இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்.
இவர்கள் நான்கு பேரும் உலக அளவில் பல்வேறு நாடுகளால் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர். எங்களுக்கு கடுமையான தண்டனையும் குறிப்பாக இந்தியாவை பொருத்தவரை தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை என்பது சட்டமாக இருந்து வருகிறது. எனவே இந்த் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டால் உயர்நீதிமன்றத்தால் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும்.






