கர்தார்பூரில் இந்திய அதிகாரிகளை அனுமதிக்க மாட்டோம் : பாகிஸ்தான்

பாகிஸ்தானிலுள்ள கர்தார்பூர் இல் வழிபாடு நடத்த இந்திய பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப் போவதில்லை எனக் கூறிய அந்நாட்டு அரசு இந்திய அதிகாரிகளை அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளது. சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் பாகிஸ்தானிலுள்ள கர்தார்பூர் இன் 19 ஆண்டுகள் வாழ்ந்ததாக கருதப்படுகிறது.

 

அவர் நினைவாக இந்திய எல்லையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் நதிக்கரையில் கர்தார்பூர் இன் தர்பார் சாகிப் என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சீக்கியர்கள் விசா இன்றி புனித பயணம் மேற்கொள்ள இந்தியாவின் குருதாஸ்பூர் பாகிஸ்தானின் இணைக்க சாலை அமைக்கப்பட்டது. கர்தார்பூர் வழித்தட திட்டத்துக்கான வரைவு ஒப்பந்தம் குறித்து மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பாகிஸ்தானை சேர்ந்த அதிகாரிகளும், இந்திய அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். முன்னதாக இந்தியாவிலிருந்து கர்தார்பூர் வரும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் அதிகாரி தெரிவித்துள்ளன. அதேநேரத்தில் இந்திய அதிகாரிகளுக்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே இந்தியர்கள் கர்தார்பூர் குழுவிற்கு செல்வதற்கான சாலை 90 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறுதி கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு நவம்பரில் குருநானக்கின் 550 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கர்தார்பூர் வழித்தடத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Leave a Reply