--- --:--:-- --

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்.

b657f0a1-17ab-43f4-a935-1ce68ccbe143

கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி விநாயகர் கோவில்களில் அதிகாலை முதலே நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயக பெருமானை தரிசித்துச் சென்றனர்.

கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஈச்சனாரி  விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா அதிகாலை மூன்று மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

இதை தொடர்ந்து அபிசேகம், அலங்கார தீபாராதனை, உச்சிகால பூஜை, என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 200 வருடம் பழமையான கோவில் என்பதால் விநாயகர் சதுர்த்தி தினமான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 

இதேபோல் புளியகுளம் விநாயகர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

ஈச்சனாரி விநாயகர் கோவில், புலியகுளம் முந்தி விநாயகர் கோவில், மருதமலை, கோனியம்மன் திருத்தலங்களில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பயங்கரவாதிகள் ஊடுருவல் காரணமாக கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும்,கோவில்களுக்கு மூன்று அடுக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon