தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் யாரும் எதிர்பாராத விதமாக தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டு நேற்று அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் வகித்து வந்த தமிழக பாஜக தலைவர் பதவி தமிழகத்தில் காலியாக உள்ள நிலையில் அந்த இடத்திற்கு வேறு யாரு நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்ற விமர்சனம் இப்போதே அரசியல் வட்டாரத்தில் கிளம்பி உள்ளது.
அந்தவகையில் அடுத்த தலைவராக எச் ராஜா வா? அல்லது பொன் ராதாகிருஷ்ணனா ? நயினார் நாகேந்திரன் ? அல்லது தமிழகத்தை கவரும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் நியமிக்கப்படலாம் என்று பலதரப்பட்ட வகையில் இவர்களின் பெயர் அடிபடுகிறது.
இருந்தபோதிலும் அடுத்த தமிழக பாஜக தலைவராக நியமிக்க அதிக வாய்ப்பு கொண்டிருப்பது நடிகர் ரஜினிகாந்த் என்ற பேச்சு அடிபடுகிறது. மேலும் இது குறித்த பேச்சுவார்த்தை ரஜினிகாந்துடன் பாஜக மேலிடம் மேற்கொண்டு வருவதாகவும் ஒருசில உடன்பாடு காரணமாக சற்று இழுபறியாக இருப்பதாகவும் நம்பகதக தகவல்கள் தெரிவித்து உள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பாஜக இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டால் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்க ரஜினிகாந்த் முன் வர உள்ளதாகவும் அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் நயினார் நாகேந்திரன், நடிகர் ரஜினிகாந்த் இடையே மறைமுகமாக போட்டி நிலவுகிறது என்று கிசுகிசுக்கப்படுகிறது.