ஆன் லைன் ரயில் முன்பதிவிற்கு சேவை கட்டணம் அறிமுகம்!

ஆன்லைனில் பதிவு செய்யப்படும் முன்பதிவு ரயில் டிக்கெட்டிற்கான சேவை கட்டணம் நாளை முதல் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. .சாதாரண வகுப்புக்கு 15 ரூபாயும், குளிர் சாதன வகுப்பிற்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ரயில் பயண டிக்கெட் முன்பதிவுக்கான சேவை கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் தனியாக வசூலிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக சேவை கட்டணம் சாதாரண வகுப்பிற்கு 20 ரூபாயும் குளிர்சாதன. வகுப்பிற்கு 40 ரூபாய் என்றிருந்த நிலையில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிக்கும் நோக்கில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே நிர்வாகம் நிறுத்தியிருந்தது.

 

இந்த நிலையில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் ரயில்வே டிக்கெட்டுக்கான சேவை கட்டணம் மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply