தமிழகம் முழுவதும் நாளை டி‌என்‌பி‌எஸ்‌சி குரூப் – 4 தேர்வு!

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வு நாளை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. 16.3 லட்சம் பேர் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் அதிகம் பேர் விண்ணப்பிக்கும் தேர்வு இதுவாகும்.

 

306 தாலுகா மையங்களில் 5 ஆயிரத்து 575 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 1497 பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு நடத்தப்படுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்.

 

கைப்பேசி, மின்னணு சாதனங்கள், கைப்பை உள்ளிட்டவை தேர்வர்கள் அனுமதிக்கப்படாது. புத்தகம்., லாக் புத்தகம், கால்குலேட்டர், துண்டுச்சீட்டு உள்ளிட்டவையும் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படாது. மீறும் நபர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

 

வண்ண பென்சில்களால் பயன்படுத்தக் கூடாது எனவும், டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தேர்வு நேரத்திற்கு அரைமணி நேரம் முன்பாக தேர்வு மையத்திற்குள் இருத்தல் நலம் என்றும் கூறியுள்ளது.


Leave a Reply