பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்!

கோவையில் ரவுடி சிலர் பட்டாக்கத்தி மற்றும் அரிவாளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் வெளியாகியுள்ளது. படத்தில் இருப்பவர்கள் சரவணம்பட்டியில் உள்ள சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் மீது காவல் நிலையங்களில் பல வழக்குகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக சதீஷ் என்பவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடினார்கள் என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Leave a Reply