மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்காத வீட்டின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை இதுவரை அமைக்காத 69 ஆயிரத்து 490 பேருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் மழை நீர் கட்டமைப்பு ஏற்படுத்த அவகாசம் தரப்பட்டுள்ளது.

 

38 ஆயிரத்து 507 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை சீரமைக்க அதன் உரிமையாளர்களுக்கு ஒரு வாரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 284 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு நல்ல நிலையில் இருப்பதாக மாநகராட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பால் சென்னையில் நான்கடி அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருப்பதாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Leave a Reply