ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பால் விலை உயர்வை எதிர்த்து வழக்கு உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது.
ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆவின் பாலின் விலையானது கடந்த 2014ஆம் ஆண்டு விலை உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தற்பொழுது 19ஆம் தேதி உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.
பசும்பால் கொள்முதல் விலை 4 ரூபாய் வீதம் விலை ஆறு ரூபாய் உயர்த்தப்படுவதாக ஆவின் பாலின் விற்பனை விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. திருவண்ணாமலையை சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் என்ற பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். இந்த வழக்கு அடுத்த வாரம் நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது .