சென்னை மாநகரம் எங்கும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இன்று மாலை 4 மணி முதலே சென்னை மாநகரம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வண்டலூர், ஆழ்வார்பேட்டை, பெருங்குடி அசோக் நக, நுங்கம்பாக்கம் சைதாப்பேட்டை போன்ற சென்னை மாநகரின் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது. இதன் காரணம் காற்றின் வேகம் மாறுபாடாக அமைந்துள்ளது. தென்மேற்கு திசையிலிருந்து நமக்கு வழக்கமாக தென்மேற்கு பருவமழையின் போது காற்று வீசும் அந்த காந்த தென்மேற்கு திசையிலிருந்து காற்று வரும் போது அதாவது, சென்னை பகுதியை கடக்கும் போது எதிர் திசையில் காற்று வீசும் போது அங்கு காற்றின் வேகம் மாறுபாடு ஏற்படும்.
அதன் காரணமாகத்தான் சென்னை மாநகரம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் மாலை நேரத்தில் 7 மணியிலிருந்து 9 மணிக்குள் கனமழை பெய்தது. இன்று காற்றின் வேகம் வேகம் மாறுபாடு சரியாக இருந்ததன் காரணமாக கிட்டத்தட்ட 4 மணியிலிருந்து 6 மணி வரை இரண்டு மணி நேரம் வரை சென்னை மாநகரம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.