கெத்து என்ற சொல் சிலப்பதிகாரத்தில் அதே பொருளில் உள்ளது!

கல்லூரிகளில் மாணவர்கள் பயன்படுத்தும் கெத்து என்ற சொல் சிலப்பதிகாரத்தில் அதே பொருளில் இருப்பதாக தமிழக வளர்ச்சித்துறை பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். திரைப்பட பாடல்கள் மூலம் புதிய தமிழ்ச் சொற்கள் மக்களுக்கு தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு அரசு செந்தமிழ் அகரமுதலி இயக்கத் திட்டம் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

 

அப்போது பேசிய அவர் கவிஞர் தாமரை பட பாடல்களில் வழக்குறைந்த தமிழ்ச் சொற்களை பயன்படுத்துவது வரவேற்கதக்கது என்று கூறினார். கல்லூரிகளில் மாணவர்கள் பயன்படுத்தும் கெத்து என்ற வார்த்தை சிலப்பதிகாரத்தில் அதே பொருளில் உள்ளது என்றும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

 

தொடர்ந்து பேசிய பாண்டியராஜன் திட்டத்தில் மாணவர்கள் பதிவு செய்து புதிய தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்து தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


Leave a Reply