குடிநீர் தொட்டியில் இருந்த புலியை ரசித்த சுற்றுலா பயணிகள்!

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் நீண்ட நேரமாக படுத்திருந்த புலிகள் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள புலிகள் காப்பகத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

 

நேற்று சுற்றுலா பயணிகள் வனத்துறை வாகனத்தில் சுற்றி பார்க்க சென்றனர். அப்போது விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக காட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிக்குள் புலி ஒன்று படுத்திருந்ததை அவர்கள் கண்டனர். அதனைக் கண்டு வாகன ஓட்டுநர் புலியின் அருகில் நிறுத்தினார்.

 

ஆனால் அந்த புலி சுற்றுலா பயணிகளை கண்டுகொள்ளாமல் அதே இடத்தில் படுத்திருந்தது. நீண்ட நேரமாக புலியைக் கண்டு ரசித்து சுற்றுலா பயணிகள். ஆசை தீரும் அளவிற்கு புகைப்படங்களை எடுத்தனர்.


Leave a Reply