பழனி மலை அடிவாரத்தில் உள்ள இரண்டு பிரபல பஞ்சாமிர்த கடைகளில் இரண்டாவது நாளாக 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த இரண்டு கடைகளில் உரிமையாளர்களும் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததையடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்விரு கடைகளின் உரிமையாளர்கள் சிவனேசன், அசோக்குமார், செல்வகுமார், பாஸ்கரன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பஞ்சாமிர்த கடை, பஞ்சாமிர்தம் தயாரிக்கும் தொழிற்சாலை, தங்கும்விடுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பல்வேறு குழுக்களாக பிரிந்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனையில் பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது பற்றி விவரங்கள் முடிவில் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






